Wednesday 8th of May 2024 02:42:02 AM GMT

LANGUAGE - TAMIL
.
சீனா, ரஷ்யா தடுப்பூசிகளை கொள்வனவு செய்யாதீர்கள்! - அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் வலியுறுத்து!

சீனா, ரஷ்யா தடுப்பூசிகளை கொள்வனவு செய்யாதீர்கள்! - அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் வலியுறுத்து!


உலக சுகாதார ஸ்தாபனத்தால் அனுமதி அளிக்கப்படாத நிலையில் சீன மற்றும் ரஷ்ய நாடுகளின் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘சினோபோர்மின்’ தடுப்பூசி மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி ஆகியவற்றை இறக்குமதி செய்ய இலங்கை அரசு பேச்சு நடத்தி வருகின்றது எனச் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

இந்த இரு தடுப்பூசிகளின் செயற்றிறன் குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச அங்கீகாரம் அளித்துள்ள போதிலும் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை இரண்டு தடுப்பூசிகளையும் அவசரகாலப் பயன்பாட்டுக்கேனும் அனுமதிக்கவில்லை.

இதேவேளை, இந்தியாவிடமிருந்து ஒரு கோடி (பத்து மில்லியன்) அளவிலான கொவிஷீல்டு கொரோனாத் தடுப்பூசி மருந்துகளைப் பெற சீரம் நிறுவனத்துடன் இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா, இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE